துணிவு படத்துல இன்னும் 5 பாடல் இருக்கு… ஜிப்ரான் கொடுத்த அப்டேட்!
துணிவு படத்தில் இன்னும் பயன்படுத்தாத 5 ட்ராக் பாடல்கள் இருக்கிறது என்றும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று ஜிப்ரான் அறிவித்துள்ளார்.
2014ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் விஜய் – அஜித் படங்கள் நேற்று முன் தினம் ஒரே நாளில் வெளியாகின. இதில் முதல் நாளில் துணிவு படம், வாரிசு திரைப்படத்தை விட பாசிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்றது. இதனால் முதல் நாளில் வாரிசு திரைப்படத்தை விட துணிவு படத்துக்குக் கூடுதல் வசூல் கிடைத்தது.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் ஜிப்ரானை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் படத்தில் பயன்படுத்தாத இன்னும் 5 ட்ராக்குகள் உள்ளதாகவும், விரைவில் அவை ரிலீஸ் ஆகும் எனவும் படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறியுள்ளார்.