துணிவு படத்துக்கு நள்ளிரவு… வாரிசுக்கு அதிகாலை – ஸ்பெஷல் ஷோ அப்டேட்!
துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11 ஆம் தேதி வெளியாகின்றன.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் விஜய்யின் வாரிசு திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் திரைப்படமும் ஜனவரி 11 ஆம் தேதியே வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இரு நடிகர்கள் ரசிகர்களும் ஆக்ரோஷமாக சமூகவலைதளங்களில் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு படங்களுக்கும் ஸ்பெஷல் ஷோ எப்போது திரையிடப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.
இந்நிலையில் துணிவு படத்துக்கு அதிகாலை 1 மணிக் காட்சிகளும், வாரிசு படத்துக்கு அதிகாலை 4 மணிக் காட்சிகளும் திரையிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.