திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 ஜனவரி 2023 (15:29 IST)

விஜய் ரசிகர்கள் என்மீது பாய்வார்கள் எனத் தெரியும்… இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதில்!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் மிகவும் எளிமையான தோற்றத்தில் வருகை தந்திருந்தார். இதுபற்றி இசையமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் அவருடைய முகநூலில் பதிந்துள்ள பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் அவர் “விஜய் ஒரு பொறுப்பான நடிகராக அவரது ஆடை மற்றும் முடித்தோற்றத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்” எனக் கூறி இருந்தார். அது ஒரு விவாதத்தைக் கிளப்ப விஜய் ரசிகர்கள் ஜேம்ஸ் வசந்தனை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர்.

இந்நிலையில் இப்போது ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் இதுபற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது “ அவ்வளவு பெரிய நடிகரை என்னைத் தவிர யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனத் தெரியும். ஆனால் அதை சொல்லியாக வேண்டும் என்று தோன்றியதால்தான் பதிவிட்டேன். பெரிய நடிகரை விமர்சித்தால் அவரின் ரசிகர்கள் விமர்சிப்பார்கள் என தெரியும்.  ஆனால் ஒரு மூத்த ஊடகவியலாளராக என் பொறுப்பு காரணமாக நான் அப்படி எழுதினேன்” எனக் கூறியுள்ளார்.