விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படத்தில் 3 ஹீரோயின்கள்: இயக்குனர் அறிவிப்பு!
விஜய் ஆண்டனி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே.
ரத்தம் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெற இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்
மேலும் இந்த திரைப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் மூன்று நாயகிகள் நடித்தாலும் ஒருவர் தான் விஜய் ஆண்டனிக்கு ஜோடி என்றும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்
ஆனால் அதே நேரத்தில் மூவருக்குமே சம அளவில் கதையில் பங்கேற்கும் வகையில் கேரக்டர்கள் அமைக்கப் பட்டுள்ளன என்றும் மூன்று நடிகைகளின் கேரக்டர்களும் பேசப்படும் என்றும் செய்ய இயக்குனர் அமுதன் தெரிவித்துள்ளார்
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் முடிவடைந்து விடும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் செய்யப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்