செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By sinoj
Last Updated : வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (12:13 IST)

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் நான்காவது அவதாரம் எது தெரியுமா...?

மகா விஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானவராக பார்க்கபடும் நரசிம்மர். மகா விஷ்ணுவின் தசாவதாரங்களில் 4-வது அவதாரம் தான் நரசிம்ம அவதாரம்

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில், (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார்.
 
சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும். தசாவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.
 
நரசிம்மன் என்றால் ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள்.நரசிம்ம அவதாரம் விஷ்ணு மனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக உள்ளது.
 
சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலஷ்மி நரசிம்ஹரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.
 
நரசிம்ஹ அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.
 
எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.
 
திருமாலின் அவதாரங்களில் நரசிம்ஹ அவதாரமே ஷண நேரத்தில் தோன்றிய அவதாரமாகும்.
 
நரசிம்ஹரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.