புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Updated : வெள்ளி, 4 ஜூன் 2021 (22:05 IST)

இயக்குனர் விஜய்யின் அடுத்த படம்: 4 முன்னணி நடிகைகள் ஒப்பந்தம்!

இயக்குனர் ஏ எல் விஜய் இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் நான்கு முன்னணி கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது
 
மஞ்சிமா மோகன், நிவேதா பெத்துராஜ், ரெபா மோனிகா மற்றும் மேகா ஆகாஷ் ஆகிய நான்கு நடிகைகள் இயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். இந்த படம் ஓடிடிக்காக தயாராக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது 
 
மேலும் இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விசாகா சென் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளார் ஏற்கனவே விஜய் இயக்கிய தலைவி என்ற ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியும் ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது