1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 செப்டம்பர் 2022 (12:39 IST)

யார் பாத்த வேல.. ட்ரெண்டாகும் முத்துபாண்டி – தனலெட்சுமி வீடியோ! – த்ரிஷாவின் ரியாக்ட்!

Ghilli
திருசிற்றம்பலம் பட காட்சியில் த்ரிஷா – ப்ரகாஷ்ராஜை இணைத்து ட்ரெண்டாகி வரும் வீடியோவுக்கு இருவரும் பதில் அளித்துள்ளார்கள்.

தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘திருசிற்றம்பலம்’. இந்த படத்தில் தனுஷின் தந்தையாக பிரகாஷ்ராஜ் நடித்திருந்தார். இந்த படத்தில் வரும் “தேன்மொழி பூங்கொடி” பாடலுக்கு கில்லி வெர்சன் செய்து ட்ரெண்ட் செய்துள்ளனர் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவில் பைத்தியக்காரத்தனமான காதல் கொண்ட ரௌடி என்றால் அது கில்லி படத்தில் வரும் முத்துப்பாண்டிதான். தனலெட்சுமி (த்ரிஷா) மீது முத்துப்பாண்டி (ப்ரகாஷ்ராஜ்) கொண்டிருந்த காதல் குறித்து அடிக்கடி பலரும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.


தற்போது தேன்மொழி பூங்கொடி பாடலில் முத்துப்பாண்டி – தனலெட்சுமி வெர்சன் ட்ரெண்டாகியுள்ளது. அதை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள பிரகாஷ்ராஜ் “இதை யார் செய்தது? இந்த நாளை இனிமையாக்கிவிட்டது. உங்கள் அன்புகளுக்கு மிக்க நன்றி.. லவ் யூ..” என பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவை ரீட்வீட் செய்துள்ள தனலெட்சுமி (த்ரிஷா) சிரிக்கும் ரியாக்சனை செய்துள்ளார். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ் (சுந்தரசோழர்) மகளாக த்ரிஷா (குந்தவை) நடித்துள்ளார். அதையும், இதையும் இணைத்து சிலர் ட்ரோல் செய்தும் வருகின்றனர்.