வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2022 (18:05 IST)

என் அண்ணனை வீழ்த்தவும் வெல்லவும் யாராலும் இயலாது- ஜெயம்ரவி

jeyam ravi
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மாக நடித்துள்ள ஜெயம்ரவி தன் டுவிட்டர் பக்கத்தில்,என் அண்ணனுக்குத் தோல்வி கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

தமிழில் வரலாற்று கதைகளை   எழுதுவதில் புகழ்பெற்ற  எழுத்தாளரான கல்கி எழுதி பொன்னியின் செல்வன் நாவல் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வாசகர்களால் படித்துக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நாவலை படமெடுக்க எம்,ஜி,ஆர், கமல் என பலரும் முயற்சித்த நிலையில், நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த மாதம் 30ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ட்ரெண்டாகி வருகின்றன. படத்தை ப்ரொமோட் செய்யும் விதமாக நடிகர்களும் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர்.

இந்த படத்தில் குந்தவையாக நடிக்கும், ஜெயம் ரவி, அருண்மொழி வர்மன் என்று டிவொட்டரில் பெயர் மாற்றம் செய்துள்ளார்,  

இந்த நிலையில், இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் படத்தை புரமோட் செய்யும் விதமாக தம்பிவுடையான் படைக்கு அஞ்சான் ⚔️இதோ நானும் வந்தியதேவனுடன் வந்து விடுகிறேன்