1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:18 IST)

ஜெயிலர்' படத்தை அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும்: திரையரங்க உரிமையாளர்கள்

jailer
ஜெயிலர்' திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் திரையிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. 
 
இந்த நிலையில் இந்த படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளையும் திரையிட வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
ஜெயிலர்' ஆடியோ இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் அவர்கள் அனைவரும்  திரையரங்குக்கு வந்து படம் பாருங்கள் என்று பேசி உள்ளார். அது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுபோல தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ஜெயிலர்' படம் திரையிட ஆவலாக உள்ளனர் 
 
அதனால் சூப்பர் ஸ்டார் அவர்கள் தமிழகத்தில் உள்ள எல்லா திரையரங்குகளிலும் ஜெயிலர்' படத்தை திரையிட ஆவணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியாகி உள்ளது.
 
Edited by Siva