வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (07:50 IST)

காவாலா பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்ட சீனியர் நடிகை… வைரல் ஆகும் வீடியோ!

சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் தமன்னா ஆகியோர் நடிக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளான காவாலா பாடல் ரிலீஸானது. இந்த பாடலில் தமன்னாவின் டான்ஸ் இணையத்தில் அதிகம் கவனம் பெற்றது.

இதையடுத்து பலரும் அந்த டான்ஸ் மூவ்மெண்ட்களை திரும்ப செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களாக அதிகளவில் வெளியிட்டு வருகின்றன. தமன்னாவும் அந்த பாடலுக்கான தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளவரும் சீனியர் நடிகையுமான ரம்யா கிருஷ்ணன் காவாலா பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.