வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (07:44 IST)

பிக்பாஸ் முதல்வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய 7 போட்டியாளர்கள்!

பிக்பாஸ் முதல்வார நாமினேஷன் பட்டியலில் சிக்கிய 7 போட்டியாளர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் தொடங்கிய நிலையில் முதல் வாரம் எவிக்சன் இல்லை என்பதால் நாமினேஷன் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இந்த வாரம் எவிக்சன் உண்டு என்பதால் நாமினேஷன் பட்டியலில் 7 பேர் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்து வந்த பாதை என்ற டாஸ்க்கில் சரியாக ஃபெர்பாம் செய்யாத 8 பேர் இந்த வார நாமினேஷனில் உள்ளதாக பிக்பாஸ் அறிவித்திருந்தார். ஆனால் இந்த இந்த எட்டு பேரில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வார கேப்டனாக பிக் பாஸ் வீட்டில் இருப்பதால் அவர் இந்த நாமினேஷன் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து ஏழு பேர் தற்போது நாமினேஷன் பட்டியலில் உள்ளனர் 
 
சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகிய ஏழு பேர் நாமினேஷன் பட்டியலில் உள்ளனர். நேற்று இரவு முதலே நெட்டிசன்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களை காப்பாற்றுவதற்காக வாக்குகள் போடா ஆரம்பித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த வாரம் ரேகா வெளியேறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் வயதான போட்டியாளரான பாத்திமா பாபுவை முதலில் பிக்பாஸ் வெளியேற்றியது போல் இந்த வாரம் ரேகாவை வெளியேற்ற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது