ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2020 (19:07 IST)

அறந்தாங்கி நிஷாவா இது? வைரலாகும் பழைய வீடியோ!

அறந்தாங்கி நிஷாவா இது? வைரலாகும் பழைய வீடியோ!
கமல்ஹாசன் கடந்த ஒரு வாரமாக தொகுத்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி அறந்தாங்கி நிஷாவால் கடந்த முதல் இரண்டு நாள் கலகலப்பாக இருந்தது. ஆனால் அதன் பின் ஏற்பட்ட நான்கைந்து சண்டைகளால் நிஷா அடக்கி வாசித்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது தனது பாணியில் ஜோக்குகளை சொல்லி சக போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் கவர்ந்து வருகிறார் 
 
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி நிஷாவின் திருமண நாள்  வந்தது என்பதும் அதற்கு கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறினார்கள் என்பது தெரிந்தது. அது மட்டுமின்றி இன்று அறந்தாங்கி நிஷாவின் பிறந்த நாள் என்பதும் அதை சக போட்டியாளர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அறந்தாங்கி நிஷாவின் திருமண வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகி வருகிறது. தனது மாமா மகளான நிஷாவை திருமணம் செய்துகொண்ட ரியாஸ் அந்த வீடியோவில் கூறும்போது ’சிறு வயதிலேயே அவருக்கு பேச்சுத் திறமை இருந்தது என்றும் அதற்கேற்ற முன்னேற வேண்டும் என்ற முயற்சியில் இருந்தது என்றும் அதனால்தான் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது