வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 12 அக்டோபர் 2020 (12:58 IST)

ரியோ, சுரேஷுக்கு சண்டை ஆரம்பம் - இனிமே தானே பாக்க போற இந்த தாத்தாவோட ஆட்டத்த!

பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக சண்டை , கோபம் என சூடுபிடித்துள்ளது. தற்ப்போது கேப்டனாக இருக்கும் சுரேஷ் சக்கரவர்த்திக்கும் ரியோவிற்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோவில் ரியோவின் கோபம் பலருக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

இதில் பாலாஜி முருகதாஸின் கேள்விக்கு பதிலளித்த சுரேஷ் சக்கரவர்த்தி ரியோவை எடுத்துக்காட்டாக பேசியதால் ரியோ கோபப்பட்டு அவர் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங் என்ன எக்ஸாம்பிள்லா சொல்லாதீங்க என மேடையில் வைத்தே திட்டுகிறார். உடனே தர்ம சங்கடத்திற்கு ஆளான சுரேஷ் எப்படியெல்லாமோ சமாளித்தார்.

போட்டியாளர்களின் போலியான முகங்களை பார்த்து ரசித்த நம் கண்கள்,அவர்களின் நிஜ முகத்தை பார்க்கும் போது அதிர்ச்சியடைகிறது. ஆம், ரியோவின் உண்மை முகம் வெளிய வருது. பிக்பாஸ் வேலையே ஆரபிச்சுருச்சு. ரியோ உண்மை முகத்தை மறைத்துகொண்டிருக்கிறார் என எண்ணிய நமக்கு இன்று தான் நம்பமுடிகிறது. இதில் சுரேஷ் மாட்டிக்கொண்டார் பாவம்.

இந்த மனுஷன் வந்த நாளில் இருந்தே ஷிவானி, அனிதா இப்போ ரியோ என ஆளாளுக்கு இவருடன் சண்டை இழுத்து வருகின்றனர். தலயில முடி இல்லனா வர்றவன் போறவன் எல்லாம் அடிப்பானுங்க போல பாவம். அது சரி சுரேஷ் தாத்தா கேப்டனாக இருக்குற அப்ப, சண்டை இல்லாமல் இருக்குமா என்ன...? இனிமே தானே பாக்க போற இந்த தாத்தாவோட ஆட்டத்தை ம்பமே சும்மா அதிருதுல்ல...