திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 7 ஏப்ரல் 2022 (20:06 IST)

அடுத்த ''பீஸ்ட்'' சம்பவம் லோடிங்...விஜய் ரசிகர்கள் உற்சாகம்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் புதிய பாடலான “பீஸ்ட் மோட்” பாடல் குறித்த அப்டேட்டை அனிருத் வெளியிட்டுள்ளார்.

நடிகர் விஜய் நடித்து நெல்சன் இயக்கியுள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பாடல்களான அரபிக் குத்தி மற்றும் ஜாலியோ ஜிம்கானா ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின.

அதை தொடர்ந்து தற்போது மூன்றாவது பாடலான “பீஸ்ட் மோட்” பாடல் விரைவில் வெளியாக உள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீஸ்ட் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் “பீஸ்ட் மோட் சாங் ரிலீஸ் பண்ணலாமா? மீனர், லீனர், ஸ்ட்ராங்கர்.. பாடல் வரிகள் – விவேக்” என பதிவிட்டிருந்தார் .

இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள  3 வது பாடல் நாளை ரிலீஸாகவுள்ளதாக  சன்பிக்சர்ஸ்  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில்,  அடுத்த ''பீஸ்ட்'' சம்பவம்  லோடிங் எனத் தெரிவித்துள்ளது. இந்த டுவிட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புதிய பாடல் வெளியாக உள்ளது விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.