1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (17:49 IST)

தந்தை வாங்கிய கடனுக்கு மாணவன் கொலை !

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தந்தை வாங்கிய கடனுக்கு 10 ஆம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கஞ்ச நாயக்கன் பட்டியைச சேர்ந்தவர் ராமலிங்கம்.  இவரது மகன் கிருஷ்ணன்( 15 வயது). அங்குள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

ராமலுங்கம் , செட்டியபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த வெள்ளமையம்மாள்  என்பவரிடம்  கடன் பெற்றதாகத் தெரிகிறது.

இதனால் வெள்ளையம்மாளுக்கும் ராமலிங்கத்திற்கும் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் 21 ஆம் தேதி, ராமலுங்கம் தனது மகனுடன்  இருசக்கர வாகனத்தை  கேட்கச் சென்றார். அப்போது, வெள்ளையம்மாள் உடன் இருந்த  பச்சமுத்து என்பவர்  .          கிருஷ்ணனை வெட்டினார்.
இதில், பலத்த காயம் அடைந்த கிருஸ்ணனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கிருஷ்ணன்  நேற்று ஸ்கிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பச்சமுத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.