முதன்முறையாக முஸ்லீம் கேரக்டரில் நடிக்கிறேன் - சிம்பு சொன்ன சீக்ரெட்... !
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் கோவையில் தொடங்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் தொடர்ச்சியாக கோவையில் முடித்த உடன் படக்குழுவினர் சென்னை திரும்பி ஒரு சில நாட்கள் மட்டுமே ஓய்வு எடுத்துவிட்டு அதன் பின்னர் இலங்கை செல்ல உள்ளனர்.
இலங்கையில் ஒன்றரை மாதம் இடைவிடாத படப்பிடிப்பு நடத்தவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் சிம்பு இப்படத்தில் ஒரு முஸ்லிம் கேரக்டரில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளியான நிலையில் இன்று ’அப்துல் காலிக்’ என்ற முஸ்லீம் கேரக்டரில் சிம்பு நடிக்க உள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு அறிவித்திருந்தார். இந்த தகவல் சமூகலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் இப்படத்தில் "அப்துல் காலிக்" கதா பாத்திரத்தில் நடிப்பது குறித்து பேசிய சிம்பு , “முதல்முறையாக முஸ்லிம் கேரக்டரில் நடிக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இஸ்லாமியர்களைப் பற்றி சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அப்போது அது எனக்குப் பிடிக்கவில்லை. காரணம் என்னுடைய நண்பர்களில் முக்கால் வாசி பேர் முஸ்லிம்கள் தான்.
பெரியார் பாடல் பாடுவது, சபரி மலைக்குச் செல்வது, முஸ்லிம் பெயரில் நடிப்பது இதெல்லாம் சிலருக்கு குழப்பமாக இவருக்கும். ஆனால் அதற்கெல்லாம் கட்டுப்பட்டு மற்றவர்களை போல என்னால் இருக்க முடியாது. நான் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதைவிட மனிதனாக இருக்கவேண்டும் என்று தான் விரும்புகிறேன்.