செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (16:21 IST)

சிம்புவை ஒழுங்காக எப்படி ஷூட்டிங் வரவைப்பது?-பிரபல இயக்குனர் சொன்ன ரகசியம்!

கே எஸ் ரவிக்குமார் சிம்புவை தனது படத்துக்கு எப்படி ஒழுங்காக ஷூட்டிங் வரவைத்தேன் என கூறியுள்ளார்.

சிம்பு ஒழுங்காக ஷுட்டிங் வராததால் பல கோடிகளை இழந்தோம் என வல்லவன், அ அ அ ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் புகார் சொல்வதை நாம் கேட்டுள்ளோம். ஆனால் இதே போல முன்னணி இயக்குனர் ஒருவரிடம் படப்பிடிப்புக்கு ஒழுங்காக வராமல் சிம்பு தன் வேலையைக் காட்டிய போது அவர் எப்படி சிம்புவை வழிக்குக் கொண்டுவந்தார் என்பதைப் பகிர்ந்துள்ளார்.

சிம்புவை வைத்து சரவணா என்ற படத்தை இயக்கிய கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் ‘சரவணா படத்தின் போது நான் வேறு சில படங்களில் கமிட் ஆகி இருந்தேன். கிடைத்த ஒரு கேப்பில் அந்த படத்தைப் பண்ண ஒப்புக்கொண்டேன். ஆனால் படப்பிடிப்பில் சிம்பு இரண்டு நாட்கள் லேட்டாக வந்தார். எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நான் அவரை அழைத்து நான் இந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன் என்றதும் அவர் பதறிப்போய் விட்டார். படத்தை சீக்கிரமா முடிச்சாதான் தயாரிப்பாளருக்கு லாபம். நீ இப்படி லேட்டா வந்தா எப்படி படத்த முடிக்க முடியும். ஒன்னு லேட்டாகும்னா முதல்நாளே என்கிட்ட எத்தனை மணிக்கு வருவேன்னு சொல்லிட்டு போ. அதுக்கேத்த மாதிரி நான் ப்ளான் பண்ணி ஷூட் பண்ணுவேன். அதன் பிறகு மறுநாள் அவர் எத்தனை மணிக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப ஆரம்பித்தார். அதே போல சொன்ன நேரத்தில் வந்தார்.’ எனக் கூறினார்.