திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (11:32 IST)

வெங்கட்பிரபுவின் டீமில் இணைந்த மனோஜ் பாரதிராஜா

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகவிருக்கும் ‘மாநாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டை தொடங்க வேண்டிய நிலையில் பல தடைகளை தாண்டி தற்போது வரும் 8ஆம் தேதி முதல் கோவையில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்ட செய்திகள் வெளியாகி உள்ளது
 
வெங்கட்பிரபுவின் டீமில் இணைந்த மனோஜ் பாரதிராஜா
இந்த நிலையில் இந்த படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி அமரன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மற்றும் பிக்பாஸ் புகழ் டேனியல் ஆகியோர் ஆவர். இந்த இருவரின் இணைப்பால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு கூடுதலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் தயாராகி விட்டதாகவும் அந்த இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு முதல்கட்ட படப்பிடிப்பில் முடிந்துவிடும் என்றும் புறப்படுகிறது பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது
 
மேலும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர்களும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது