புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (18:58 IST)

83 வயதில் தனது 9வது மனைவியை விவாகரத்து செய்த நடிகர்

al pacino- with girl friend
‘’தி காட்பாதர்’’ படம் புகழ் ஹாலிவுட்  நடிகர் அல் பாசினோ( 83).     இவர் தன் 9 வது மனைவியையும் பிரிந்துள்ளார்.

அமெரிக்காவில் பிரபல நடிகர் அல் பசீனோ. இவர் தி காட்பாதர் (1972) என்ற படத்தில் மைக்கேல் கோர்லியோனாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இவர் ஆஸ்கர் விருது மற்றும் எம்மி விருது பெற்றுள்ளார்.

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வரும் நடிகர் அல் பசீனோ தொடர்ந்து  நடித்து வருகிறார்.

ஏற்கனவே, அவர் 8 திருமணம் செய்துள்ள நிலையில் அவர்கள் அனைவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்த நிலையில் கடந்தாண்டு 83 வயதில் நூர் அல்பலா என்ற இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியர்க்கு சில மாதங்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், அல்பாசினோவிடம் இருந்து அவரது 9வது மனைவி நூர் அல்பலாவும் விவாகரத்து பெற்றுள்ளார். இது ஹாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.