1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 9 செப்டம்பர் 2023 (18:16 IST)

‘’இது ரொம்ப பெரிய பிரச்சனை’’….'ரத்தம்' பட டிரைலர் ரிலீஸ்!

ratham
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பிச்சைக்காரன் 2. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையடுத்து,  இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி,  நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன்,  மகிமா நம்பியார்  ஆகியோர் நடிப்பில்  கண்ணன்  நாராயணன் இசையமைப்பில்,  டிகே சுரேஷ் எடிட்டராக பணியாற்றியுள்ள படம் ரத்தம்.

இந்த படம் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாகவும்,  இந்த டிரைலரை இயக்குனர்கள் பா ரஞ்சித் மற்றும் வெங்கட்பிரபு ஆகியோர் வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று மாலை ரத்தம் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு குற்ற சம்பவம், அதன் பின்னணி, விசாரணை ஆகியவற்றின் அடிப்படையில், இப்படத்தின் கதை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.