பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் பாட்டல் ராதா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!
இயக்குனர் பா ரஞ்சித் சமூகநீதிக்கான படங்களை இயக்குவதோடு மட்டுமில்லாமல் தன்னுடைய நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் மூலமாக படங்களைத் தயாரிக்கவும் செய்கிறார். இந்நிலையில் பலூன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தோடு அவரின் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து பாட்டல் ராதா என்ற படத்தைத் தயாரிக்கிறது. இந்த தினகரன் சிவலிங்கம் இயக்குகிறார்.
ஷான் ரோல்டன் இசையமைக்கும் இப்படத்தில் குருசோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் , ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றன. குடிப் பழக்கத்துக்கு அடிமையான ஒருவரின் கதையை சொல்லும் படம் என்பதை டீசர் கோடிட்டு காட்டியது.
இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 20 என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்போது ஜனவரி 24 ஆம் தேதிக்கு மாற்றியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே ரிலீஸான புஷ்பா 2 அதிக தியேட்டர்களில் ஓடிவருவதாலும் டிசம்பர் 20 ஆம் தேதி வெற்றிமாறனின் விடுதலை 2 ரிலீஸாவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.