திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (21:59 IST)

டுவிட்டரில் இணைந்தார் ‘சார்பாட்டா பரம்பரை நடிகர்!

பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இன்று முதல் டுவிட்டரில் இணைந்துள்ளார்
 
ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான ‘சார்பாட்டா பரம்பரை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் பிரபலமான நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் தங்கதுரை
 
பழைய ஜோக் தங்கதுரை என்று விஜய் டிவி நேயர்களுக்கு அறிமுகமான இவர் சமீபத்தில் முடிவடைந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது அவர் டுவிட்டரில் இணைந்துள்ளார். தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தை அவர் வெளியிட்டு தன்னை ஃபாலோ செய்யும்படி அவர் கேட்டுள்ளார் இதனை அடுத்து ஒரே நாளில் தனது டுவிட்டர் பக்கத்தில் சுமார் 13 ஆயிரம் பேர் வரை ஃபாலோ செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் தங்களுக்கு வரவேற்று பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது