வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தை மீண்டும் முடக்க வேண்டும்: பாஜக

ராகுல்காந்தியின் டுவிட்டர் பக்கத்தை மீண்டும் முடக்க வேண்டும் என பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா என்பவர் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை அவர்களின் ஒப்புதலோடு வெளியிட்டதாக ராகுல்காந்தி கூறியிருந்தார். ஆனால் அந்த சிறுமியின் பெற்றோர்கள் இதனை மறுத்துள்ளனர். எனவே ராகுல் காந்தி டுவிட்டர் பக்கத்தை மீண்டும் முடக்க வேண்டும் என்று கூறினார் 
 
மேலும் ராகுல் காந்தியின் அரசியல் கணக்கை ஏற்கனவே நாட்டு மக்கள் முடக்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் கணக்கு அதேபோல் முடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ராகுல் காந்தி பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார் என்றும் அவரது நம்பகத்தன்மையை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 
 
ராகுல் காந்தி தற்போது அரசியல் சுற்றுலா செய்து வருகிறார் என்றால் அவரது பார்வை தற்போது கேரளாவில் நோக்கி சென்று விட்டது என்றும் அமைதியில் தோற்று விட்டு கேரளாவுக்கு ஓடிப் போய்விட்டார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
 
பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா அவர்களின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து என்ன பதிலடி கொடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்