உலக அரங்கில் இந்திய கொடி பறக்கிறது: அஜித்துக்கு ஆந்திர துணை முதல்வர் வாழ்த்து..!
துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பெற்றுள்ளது. இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், அஜித் குமாருக்கும் அவரது அணிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
துபாய் கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்து ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ் என்ற விருதை பெற்ற அஜித் குமாரும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பெரிய உறுதியுடன் சவால்களை சமாளித்து உலக அரங்கில் இந்திய கொடியை உயர பறக்க விட்டது உண்மையிலேயே ஊக்கமளிக்கிறது. அஜித் மற்றும் அவரது குழுவிற்கும் இன்னும் பல வெற்றிகள் கிடைக்க வாழ்த்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran