ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:49 IST)

காத்திருந்து களைத்துப்போன விஜய் ரசிகர்களுக்கு டபுள் தமாக்கா ரெடி!

விஜய்யின் 64 ஆவது படமான மாஸ்டர் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இதையடுத்து அவரது அடுத்த படத்தை யார் இயக்குவது என்ற கேள்வி எழுந்த நிலையில் அதில் பலரின் பெயர் பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதிச்சுற்று மற்றும் சூரரைப் போற்று ஆகிய திரைப்படங்களின் இயக்குனர் சுதா கொங்கரா சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப் போகவே அதில் நடிப்பார் என சொல்லப்பட்டது.

ஆனால் திரைக்கதை பணிகளை முடித்து படப்பிடிப்பு தொடங்க இந்த அண்டு இறுதி ஆகிவிடும் என்பதால் அதற்குள் ஒரு படத்தை நடித்து முடிக்க ஆர்வமாக இருக்கிறார் விஜய். இந்நிலையில் தனக்கு துப்பாக்கி படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைத் தந்த முருகதாஸ் துப்பாக்கி 2 திரைக்கதையோடு வர அவருக்கு ஓகே சொல்லியுள்ளார்.

இந்நிலையில் விஜய் , முருகதாஸ் , சன் பிச்சர்ஸ் என வெற்றிக்கூட்டணி கைகோர்த்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. எனினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவராத நிலையில் சரியான சமயம் பார்த்த தயாரிப்பு நிறுவனம் வருகிற விநாயகர் சதுர்த்தியன்று படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட உள்ளனராம். அதே நேரத்தில் மாஸ்டர் படத்தின் அப்டேட் கூடவே வருவதாகவும் நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிய விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் குஷியாகிவிட்டனர்.