திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:16 IST)

ஒரே ஹீரோ 1000 கோடி ரூபாய் முதலீடு – வியக்க வைக்கும் நடிகர்!

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைக் கவர்ந்த பிரபாஸ் இப்போது வரிசையாக அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்திய அளவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தும், தமிழக அளவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விஜய்யுமே தென்னிந்திய சினிமாக்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இருவர் கூட இன்னும் 100 கோடி சம்பளத்தை எட்டவில்லை. ஆனால் பாகுபலி மூலமாக பேன் இந்தியா நடிகராக மாறிய பிரபாஸ் இப்போது 100 கோடி சம்பளம் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சம்பளத்துக்காக ஜி எஸ் டி தொகையையும் தயாரிப்பாளரே கட்டவேண்டும் என்றும் சொல்கிறாராம்.

ஆனாலும் பிரபாஸ் படமென்றால் கண்ணை மூடிக்கொண்டு பணத்தைக் கொட்ட தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்த வகையில் அவர் அடுத்து நடிக்க ஒப்பந்தம் செய்துள்ள 3 படங்களின் பட்ஜெட் தொகையே 1000 கோடியைத் தாண்டியுள்ளது. மகாநடி இயக்குனர் நடிப்பில் உருவாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு 250 கோடி பட்ஜெட்டும், அடுத்ததாக நடிக்க இருக்கும் பிரபாஸ் 20 படத்திற்கு 400 கோடி பட்ஜெட்டும், நேற்று போஸ்டர் வெளியிடப்பட்ட ஆதிபபுருஷ் என்ற 3டி படத்திற்காக 500 கோடி பட்ஜெட் சொல்லப்படுகிறார்.