செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (12:48 IST)

அப்பாவானார் ஆங்கர் விஜய் - வைரலாகும் பேபி போட்டோ!

ஆர்ஜேவாக மீடியா உலகிற்கு என்ட்ரி கொடுத்த விஜய் தற்போது விஜேவாகக் கலக்கிக் கொண்டிருக்கிறார். ரேடியோ மிர்ச்சி FM ஸ்டேஷனில் ஆர்ஜேவாக இருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பலருக்கும் பரிட்சயமான குரல் தான் ஆர்ஜே விஜய்.

பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளர், விருது வழங்கும் விழா என களத்தில் இறங்கி பட்டி தொட்டியெங்கும் தன்னை பரீட்ச்சிய படுத்திக்கொண்டார். அதையடுத்து இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் Vs டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பேமஸ் ஆனார்.  இவர் மிர்ச்சி மோனிகா என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இந்நிலையில் தற்போது விஜய்க்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான விஷயத்தை அழகிய புகைப்படத்துடன் இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். அவருக்கு நண்பர்கள் , ரசிகர்கள் , பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.