செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 21 ஜூன் 2021 (10:40 IST)

அடங்கவே மாட்டீங்களா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் மைதானத்தில் வலிமை அப்டேட் – போர்டு பிடித்த ரசிகர்கள்

இந்தியா – நியூஸிலாந்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் மைதானத்தில் சிலர் வலிமை அப்டேட் கேட்டு போர்டு பிடித்தது வைரலாகியுள்ளது.

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிக்கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒன்றரை வருடங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் இதுவரை படத்தின் போஸ்டர் கூட வெளியிடப்படவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அடிக்கடி வலிமை அப்டேட் கேட்டு திரை பிரபலங்கள், அரசியல் கூட்டங்கள், விளையாட்டு மைதாங்களில் போர்டு பிடிப்பது தொடர் கதையானது.

இதை தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அஜித் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ளப்பட்டதால் ரசிகர்கள் மௌனம் காத்தனர். இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடந்து வரும் இந்தியா – நியூஸிலாந்து இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் மைதானத்தில் வலிமை அப்டேட் கேட்டு மீண்டும் போர்டு தூக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.