புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (17:56 IST)

மாஸ் காட்டும் தல 59 - அஜித்துடன் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' பிரபலம்!

நான்காவது முறையாக அஜித் - இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'விஸ்வாசம்'. இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. 


 
விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்த கையோடு தல அடுத்த படத்தில் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். அஜித்தின் 59-வது படத்தை ‘சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஹெச்.வினோத் இயக்குகிறார். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்' நிறுவனத்துடன் இணைந்து மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது தயாரிக்கிறார். 
 
இந்த படம் இந்தியில் வெளியான ‘பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட உள்ளது. தல அஜித் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கேரக்டரில் நடிக்கவுள்ளார். தமிழில் இயக்கப்படும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார், நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால் , இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிக்கிறாராம். அதுவும் மிக முக்கியமான வில்லன் வேடத்தில் இவர் நடிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.