1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 15 டிசம்பர் 2018 (13:03 IST)

அஜித் படத்தில் நஸ்ரியா ரீ என்ட்ரி! என்ன ரோல் தெரியுமா?

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்தில் நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 


 
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித் சிவாவுக்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டார். அதற்கு பதில் தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.  
 
இந்த படத்தை மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்நிலையில் தல 59 என்று தற்போதைக்கு கூறப்படும் இந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. பூஜையின் போது மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்துக்கு  மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது. 
 
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசைமையக்கிறார். எனவே யுவன் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் மேலும் ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. 
 
இந்த படத்தில் இளசுகளின் கனவு கன்னியான நடிகை நஸ்ரியா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார். இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. சில மாதங்களாகவே நஸ்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து அஜித் பற்றிய செய்திகளை பதிவிட்டு வந்தார். அப்போதே அவர் அஜித்துடன் நடிக்க இருக்கிறாரோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்தது. தற்போது அது உறுதியாகிவிட்டது. 
 
மேலும் பிங்க் படத்தின் ரீமேக் என்று கூறப்படுவதால், டாப்ஸி நடித்த கதாபத்திரத்தில் நஸ்ரியா நடிப்பார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.