வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (21:20 IST)

'மங்காத்தா'வுக்கு பின் மீண்டும் அஜித் படத்தில் இணையும் பிரபலம்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள நிலையில் இன்று அவர் நடிக்கவுள்ள அடுத்த படமான 'தல 59' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை யுவன் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். 'தல 59' படத்தில் இணைந்தது மிகவும் சந்தோஷமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அஜித் நடித்த 'மங்காத்தா' படத்திற்கு பின் மீண்டும் அவர் நடிக்கும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மங்காத்தா' படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றது மட்டுமின்றி அந்த படத்தில்  தீம் மியூசிக்கை சூப்பராக கம்போஸ் செய்திருப்பார் யுவன்ஷங்கர்ராஜா. பில்லா, மங்காத்தா போன்று மீண்டும் ஒரு சூப்பர் தீம் மியுசிக் இந்த படத்திலும் அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்