வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:00 IST)

சிவாவுக்கு என்டுகார்டு போட்ட அஜித்! தல 59 படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!

சென்னையில் தல அஜித் நடிக்கும் 59 படத்துக்கான பூஜை போடப்பட்டுள்ளது. 


 
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ள அஜித், சிவாவுடன் அடுத்த படத்தில் இணையவில்லை. அதற்கு பதில் தீரன் அதிகாரம் படத்தை இயக்கிய வினோத்துடன் அஜித் இணைந்துள்ளார்.  இந்த படத்தின் கதை பிங்க் ரீமேக் கதையாகும். அமிதாப் நடித்த வேடத்தி அஜித் நடிக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்கிறார்.
 
இந்நிலையில் தல 59 படத்தின் பூஜை நடத்தப்பட்டது. பூஜையின் போது மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்துககுக்கு  மாலை போட்டு மரியாதை செய்யப்பட்டது.  படத்துக்கு பூஜை போடப்பட்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வினோத் வெளியிட்டுள்ளார்.
 
டுவிட்டர் லிங்க்