வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 ஜூலை 2020 (12:32 IST)

சூர்யா பிறந்த நாளில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர்

சூர்யா பிறந்த நாளில் ‘வாடிவாசல்’ ஃபர்ஸ்ட்லுக்
சூர்யா நடித்து முடித்துள்ள ’சூரரைப்போற்று’ திரைப்படம் லாக்டவுன் முடிந்து திரை அரங்குகள் திறந்த உடன் வெளியாகும் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சூரரைப்போற்று படத்தை அடுத்து அவர் ’வாடிவாசல்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ’வாடிவாசல்’ படத்தின் தயாரிப்பாளர் தாணு அவர்கள் சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஒரு கவிதையையும் ’வாடிவாசல்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார். இந்தக் கவிதை மற்றும் வாடிவாசல் போஸ்டர் ஆகியவைகளை சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவதால் வைரல் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தயாரிப்பாளர் தாணு அவர்கள் சூர்யாவுக்கு பிறந்த நாள் தெரிவித்த கவிதை இதுதான்:
 
தம்பி...
இன்று உங்கள் பிறந்த நாள் 
என்றும் அது சிறந்த நாள்
இனிய இந்நாளில் 
எல்லா வளமும்
நலமும் பெற்று
தேக பலம் 
பாத பலம் 
ஆயுள் பலம் பெற்று 
வாழிய பல்லாண்டு