புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஜூலை 2020 (17:29 IST)

சூர்யாவின் ‘சூரரை போற்று’ சூப்பர் அப்டேட் இதுதான்: துள்ளி குதித்த ரசிகர்கள்

சூர்யாவின் ‘சூரரை போற்று’ சூப்பர் அப்டேட் இதுதான்
சூர்யா நடிப்பில், சுதா கொங்காரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய ’சூரரைப்போற்று’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன் சென்சாரில் ‘யூ’ சான்றிதழ் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுமா? அல்லது ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸ் ஆகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
இந்த நிலையில் இன்று காலை ’சூரரைப்போற்று’ படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த படத்தின் ஒரு நிமிட வீடியோ பாடல் வரும் 23ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் அவரது ரசிகர்களுக்கு இந்த ஒரு நிமிட வீடியோ பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்பதால் அவரது ரசிகர்கள் துள்ளி குதித்து வருகின்றனர்.
 
’சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘காட்டுப்பயலே’ என்ற பாடலின் ஒரு நிமிட வீடியோ வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து இதுகுறித்து ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது.  
 
சூர்யா, அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சுதா கொங்கரா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ளது. நிகேஷ் பொம்மிரெட்டி ஒளிப்பதிவில் சதீஷ் சூர்யா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது