1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (19:55 IST)

'காலா' படத்தை ரிலீசுக்கு முன்பே வெளியிடுவோம்: தமிழ்ராக்கர்ஸ் சவால்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகாவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது முதல் இந்த படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
 
இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து ஏரியாக்களின் வியாபாரமும் முடிந்து தற்போது தியேட்டர்கள் புக் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 'காலா' படத்தை முதல் நாள் முதல் காட்சி தியேட்டரில் திரையிடுவதற்கு முன்பே நாங்கள் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் சமூக வலைத்தளத்தில் சவால் விடுத்துள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கும் லைக்கா நிறுவனத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திற்கும் விஷாலுக்கும் மறைமுக ஒப்பந்தம் இருப்பதாகவும் வதந்திகள் கிளம்பிய நிலையில் தற்போது காலா படம் குறித்த சவால் வெளிவந்துள்ளது.
 
இந்த சவாலை தனுஷ் உள்பட 'காலா' படக்குழுவினர் எப்படி சமாளிக்க போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்