ரஜினியுடன் நடித்தது குறித்து மனம் திறந்த ஈஸ்வரி ராவ்
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படத்தில் ரஜினியுடன் நடித்தது குறித்து நடிகை ஈஸ்வரி ராவ் மனம் திறந்து பேசியுள்ளார்.
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருன் ஜுன் 7ம் தேதி ரிலீஸாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடித்தது குறித்து அவரிடம் கேட்ட்போது...
“ ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க பல ஹிரோயின்கள் காத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் நம்பமுடியவில்லை. இயக்குனர் ரஞ்சித் என்னை அழைத்து தேர்வு செய்தார். 25 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டத்தில்லை. காலா படத்தில் என்னுடைய படகாட்சிகள் முழுவதும் மும்பை தராவியில் படமாக்கப்பட்டுள்ளது” என்றார்.