லீவ் லெட்டரை தயார் செய்துக்கொள்ளுங்கள்; ரசிகர்களுக்கு தனுஷ் வேண்டுகோள்
காலா படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியிட்ட தனுஷ் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணி இரண்டாவது முறையாக காலா படத்தில் இணைந்துள்ளார். கபாலி படம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அரசியல் பேசும் படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித்.
இந்த படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. காலா திரைப்படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் காலா படத்தின் டிரெய்லர் மாலை 7 மணி வெளியாகும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதில் படத்தின் ரிலீஸ் தேதியை குறித்து வைத்து கொள்ளுங்கள். லீவ் லெட்டரை தயார் செய்துக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கபாலி படம் வெளியான போது சில ஐடி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதும், ரசிகர்கள் சிலர் படம் பார்க்க விடுமுறை கோரியதும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.