புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (16:10 IST)

காரைக்குடியை முகாமிடும் தமிழ் சினிமா!

தமிழ் சினிமாவின் பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நடந்து வருகிறது.

தமிழ் சினிமா கொரோனாவுக்கு பிறகு பெரிய மாற்றங்களை சந்தித்து வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமாக இருப்பதால் ஐதராபாத் போன்ற வெளிமாநிலங்களுக்கு சென்றனர். ஆனால் இப்போது தமிழகத்தில் காரைக்குடியில் அதிகளவில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அருண் விஜய் ஹரி படம் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் படமாக்கப்பட்டு வரும் நிலையில் கமலின் விக்ரம் படப்பிடிப்பும் காரைக்குடியில் நடக்க உள்ளது. இதனால் காரைக்குடியில் படக்குழுவினரை தங்க வைப்பதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.