1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (11:07 IST)

மதுரை ஆதினத்தின் அதிகாரம் என்னிடம் உள்ளது… நித்தியானந்தா அறிக்கை!

மதுரை ஆதினம் சுவாசக் கோளாறு காரணமாக அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை ஆதினத்தின் 292 ஆவது மடாதிபதியான அருணகிரிநாதர் தற்போது சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நித்தியானந்தா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அதில் ‘மதுரை ஆதீனத்தின் 292வது குரு மஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் விரைவில் நலம்பெற பிரார்த்தனை செய்யுங்கள். ஆதீன மடத்திற்கான எல்லா பொறுப்புகள், கடமைகள், உரிமைகள் மற்றும் அதிகாரங்களை தான் பெற்றுள்ளேன். ஆன்மீக மற்றும் மத ரீதியான சடங்குகள், பூஜைகள் செய்வதற்கான பாரம்பரிய உரிமைகள் என்னிடம் உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளதால் ஆதினத்தைக் கைப்பற்ற அவர் முயற்சி செய்வதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.