பொன்னம்பலத்தின் மருத்துவ செலவை ஏற்ற ரஜினிகாந்த்!!

Sugapriya Prakash| Last Modified சனி, 11 ஜூலை 2020 (13:57 IST)
கமல்ஹாசனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், நடிகர் பொன்னம்பலத்தை தொடர்புகொண்டு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். 
 
தமிழ் சினிமாவின் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடிகர் பொன்னம்பலம் காமெடி நடிகராகவும், வில்லன் நடிகராகவும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக பொன்னம்பலம் இருந்தபோது அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். 
 
அதுமட்டுமின்றி கமல்ஹாசனுடன் பல திரைப்படங்களில் நடித்த பொன்னம்பலம், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவருடனான நெருக்கம் அதிகமானது. இந்த நிலையில் நடிகர் பொன்னம்பலம் தற்போது சிறுநீரக கோளாறு காரணமாக அடையாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
இது குறித்த தகவல் அறிந்ததும் கமல்ஹாசன் அவருக்கு உதவி செய்ததாகவும் அவருடைய குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொண்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கமல்ஹாசனைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பொன்னம்பலத்தை தொடர்புகொண்டு தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்துள்ளார். 
 
மேலும் மருத்துவச் செலவை முழுமையாக நான் கவனித்துக் கொள்கிறேன் நீங்கள் நன்றாக இருங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் கூறியதாக கூறப்படுகிறது. அதோடு ஊரடங்கு முடிந்த பிறகு நேரில் வந்து பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :