சாத்தான்குளம் டுவீட்: ரஜினிக்கு நன்றி தெரிவித்த உதயநிதி

சாத்தான்குளம் டுவீட்: ரஜினிக்கு நன்றி தெரிவித்த உதயநிதி
Last Modified புதன், 1 ஜூலை 2020 (14:06 IST)
சாத்தான்குளம் டுவீட்: ரஜினிக்கு நன்றி தெரிவித்த உதயநிதி
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது டுவிட்டர் பக்கங்களில் ஆவேசமான கருத்துக்களை தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சற்று முன்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் #சத்தியமா விடக்கூடாது என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்த டுவிட் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது டுவிட்டரில் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
அதே நேரத்தில் ரஜினியை பிடிக்காதவர்கள் இந்த டுவிட்டை வைத்து மீம்ஸ்கள் பதிவு செய்து கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ரஜினியின் சாத்தன்குளம் டுவீட் குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறியதாவது:

தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என நீதிமன்றம் ‘பல’ நாட்களுக்கு முன்பே குறிப்பிட்டுள்ளது. அக்குடும்பத்துக்கு நீதிகிடைக்க தமிழக முதல்வரை எழுப்பும் தலைவர் முக ஸ்டாலின் அவர்களின் தொடர் முயற்சியில் இணைந்துகொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :