1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 2 ஜூலை 2020 (11:14 IST)

இதான் ரஜினியோட பவர்: #சத்தியமா_விட_கூடாது நேற்று முதல் இன்று வரை டிரெண்டிங்கில்!!

#சத்தியமா_விட_கூடாது என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 

 
சாத்தான்குளத்தில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காவலர்களை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர். 
 
இது தொடர்பாக கொந்தளித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் போலீஸார் மாஜிஸ்திரேட்டை பேசியது குறித்து அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதோடு, குற்றவாளிகளுக்கு தக்க தண்டனையும் வழங்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். 
 
இதை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இணையத்தில் #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்ய துவங்கினர். தற்போது காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஹேஷ்டேக்கை மீண்டும் டிரெண்டாக்க துவங்கியுள்ளனர். 
 
மேலும் இது தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பவர் எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.