திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (14:56 IST)

கொரொனா நோயாளிகளை குணப்படுத்திய மருத்துவரை பாராட்டிய நடிகர் ரஜினி!

தமிழகத்தில் வேகமாக கொரொனா தொற்று பரவி வருகிறது. இந்தக் கொரொனா தொற்றுக்கு சித்த மருத்துவ சிகிச்சை முறையில் சிகிச்சை அளித்துவரும்  மருத்துவரை தொலைபேசியில் அழைத்து ரஜினி பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

சென்னை வடபழனி அருகேயுள்ள சாலிகிராமத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில்  கொரொனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவமுறையில் சிகிச்சை அளிக்கப்படு வருகிறது.

சித்த மருத்துவர் வீரபாபு, இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கொரொனாவுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு அங்கீகாரம் பெற்றுள்ளார் என்பதால் இதுவரை சுமார் 900க்கும் மேற்பட்ட கொரொனாவால்  பாதிக்கப்பட மக்களுக்கு சிகிச்சை அளித்து பூரணகுணமடைய வைத்துள்ளார்.

இந்நிலையில் மருத்துவர் வீரபாபுவுன் சிறப்பாக சேவையை அறிந்த நடிகர் ரஜினிகாந்த்ம் நேற்று அவரது தொலைபேசிக்கு அழைத்து அவரைப் பாராட்டியுள்ளார். மேலும் கொரொனா கால ஊரடங்கு முடிந்ததும் வீட்டிற்கு வாருங்கம் சந்திப்போம் என தெரிவித்துள்ளார்.