புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2020 (12:10 IST)

சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் போலீஸ் புகார்: என்ன காரணம்?

சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூர்யா நற்பணி மன்றத்தினர் போலீஸ் புகார் கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சூர்யாவை செருப்பால் அடித்தால் ஒரு லட்ச ரூபாய் தருவதாக கூறினார். ஆனால் இதனை அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியதாகவும் அதற்கு சூர்யா தன்னை செருப்பால் அடித்தால் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றால்தான் அடிவாங்க தயார் என்று கூறியதாகவும் வதந்திகள் கிளம்பின 
 
இந்த நிலையில் நடிகர் சூர்யா குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சேலத்தை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை கண்காணிப்பாளர் உறுதி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே சூர்யா தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வரும் நிலையில் தற்போது சூர்யா நற்பணி இயக்கத்தினர் கொடுத்துள்ள இந்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது