1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 23 செப்டம்பர் 2020 (11:09 IST)

இத்தனை படம் பண்ணிய எனக்கு கதை ஒழுங்கா பண்ண தெரியாதா? சூர்யா மேல் கடுப்பான ஹரி

நடிகர் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கவேண்டிய திரைப்படம் ஏன் கைவிடப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்ததாக கூறப்பட்ட ’அருவா’ திரைப்படம் திடீரென டிராப் ஆனது என்பது தெரிந்ததே. இந்தப் படத்தின் இடைவேளைக்குப் பிந்தைய கதை தனக்கு திருப்தி இல்லாததால் அந்த கதையை மாற்றுமாறு சூர்யா கூறியதாகவும் ஆனால் ஹரி அடுத்தடுத்து கூறிய கதைகளும் சூர்யாவுக்கு பிடித்ததால் ஒரு கட்டத்தில் கடுப்பான ஹரி தான் இந்த படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக கூறிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது 

ஆனால் ஹரி தரப்போ சூர்யாவுக்கு சிங்கம் பட வரிசைகளின் மூலம் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கிக் கொடுத்தது தான்தான் எனறும், தன்னை நம்பி ஷூட்டிங் வராமல் சூர்யா கதை விஷயத்தில் இவ்வளவு முரண்டு பிடித்தது மனக்கசப்பை உண்டாக்கியதாகவும் அதனால் படத்தில் இருந்து விலகியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த இணை பிரிந்தது கமர்ஷியல் பட ரசிகர்களுக்குதான் மிகப்பெரிய இழப்பு.