புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 5 ஜூன் 2020 (11:21 IST)

சண்டை காட்சிக்கு பிறகு சேட்டை பண்ண சூர்யா - சூப்பர் வைரல் வீடியோ இதோ!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனராக திரைத்துறையில் நுழையும் பலருக்கும் இன்று கனவு நாயகனாக முன்னிற்கிறார் சூர்யா. தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் ’சூரரைப்போற்று’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிக்கிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ளனர். இத்தரக்கிடையில் கொரோனா ஊரடங்கில் மாட்டிக்கொண்டதால் இந்த கேப்பில் ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தை ott-யில் வெளியிட்டு நல்ல லாபம் பார்த்துவிட்டார். படமும் விமர்சன ரீதியாக நல்ல ஹிட் அடித்துவிட்டது.

இந்நிலையில் சூர்யா ஷூட்டிங் ஸ்பாட்டில் சீரியசான சண்டை காட்சியில் நடத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. அந்த வீடியோவில், காட்சியில் வில்லனை அடித்துவிட்டு ஜாலியாக ஆட்டம் போடுகிறார். இது கடந்த 2015 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாசு என்கிற மாசிலாமணி படத்தின் படப்பிடிப்பின் பொது எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை கண்ட அவரது ரசிகர்கள் அண்ணன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவ்வளவு ஜாலியாக இருப்பாரா..? என வியப்புடன் ரசித்து வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Guess the movie !?

A post shared by Suriya (@suriyasivakumarofficial) on