செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 1 ஜூன் 2020 (23:20 IST)

ஜோதிகாவின் சம்பளம் என்ன ? நடிகர் சூர்யா பதில்

பொன்மகள் வந்தால் படத்தில் ஜோதிகாவின் சம்பளம் என்ன என்ற கேள்விக்கு சூர்யா பதிலளித்துள்ளார்.

சூர்யா ஜோதிகா இருவரும் நேரலையில் கலந்துகொண்டு பேட்டியளித்தனர். அப்போது, பொன்மகள் வந்தாள் படத்துக்கு ஜோதிகாவுக்கு என்ன சம்பளம் என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த சூர்யா , 2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தில் தான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மேலும் எங்கள் இருவருக்குள் பணத்தை மாற்றி சுழற்சி செய்து கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கு ஜோதிகா கூறியதாவது : எனக்குக் கிடைத்த மிகப்பெரிய சம்பளம் என்பது சூர்யாவின் அனைத்து ரசிகர் மன்றங்கள் தான் என தெரிவித்துள்ளார். மேலும் என் படத்தின் டிரைலர் வெளியானாலோ படம் ரிலீச் ஆனாலோ அவரது ரசிகர்கள் பெரிய வரவேற்பு தருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.