புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 3 ஜூன் 2020 (13:37 IST)

அன்றே சொன்னார் சூர்யா! வெச்சு செய்யும் மீம்ஸ் க்ரியேட்டர்ஸ் – கலகலக்கும் மீம்ஸ்!

உலகில் நடக்கும் பல பேரிடர் சம்பவங்களை சூர்யா நடித்த படங்களோடு தொடர்பு படுத்தி மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வெளியிடும் மீம்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா பரவியபோது சூர்யா நடித்த “ஏழாம் அறிவு” படத்தில் இதுகுறித்து பூடகமாக பேசியிருப்பதாக மீம்ஸ்கள் வெளியானது. தொடர்ந்து வெட்டுக்கிளிகள் படையெடுப்பு தொடங்கியதையடுத்து சூர்யா நடித்த “காப்பான்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாலைவன வெட்டுக்கிளிகள் குறித்த காட்சி ட்ரெண்டிங் ஆனது.

அதை தொடர்ந்து உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு பேரிடர் சம்பவங்களோடு சூர்யாவை தொடர்பு படுத்தி மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். அத்தோடு விட்டால் பரவாயில்லை என்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை கிடைப்பது போலவும், 90ஸ் கிட்ஸ்களுக்கு கல்யாணம் நடப்பது போலவும் சூர்யா படம் நடிக்க வேண்டும் என்றெல்லாம் மீம்களை ஷேர் செய்து வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…