பின்னு போட்ட சட்டை... ஊக்கு போட்ட செருப்புனு இருந்த என்னை இயக்குநர்னு சொன்னவர் அஜித்!

Papiksha Joseph| Last Updated: வெள்ளி, 29 மே 2020 (17:51 IST)

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே தல அஜித்தை வைத்து வாலி படத்தை இயக்கி நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு மாபெரும் பேரும் புகழும் பெற்றவர் எஸ்.ஜே.சூர்யா. அதையடுத்து குஷி, நியூ , அன்பே ஆருயிரே, இசை என பல படங்களை இயக்கியிருக்கிறார். ஆனால், வாலி , குஷி படத்தை தவிர நிறைய தோல்விகளை சந்தித்துள்ளார்.

பின்னர் மிகுந்த மனா உளைச்சலுக்கு ஆளான எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கியே இருந்தார். பின்னர் மீண்டும் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் இறைவி படத்தில் ஒரு இயக்குனராக நடித்து பலரது பாராட்டுக்களை பெற்றார். வெற்றி, தோல்வி என சரிசமாக இன்பமும் துன்பமும் அடைந்த இவர் தொடர்ந்து போராடிக்கொண்டுதான் இருகிறார்.

இந்நிலையில் பல வருடங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சி பேட்டியில் அஜித் குறித்து பேசிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், "என் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மாவிற்கு பின்னர் மறக்க முடியாத ஒரு நபர் என்றால் அஜித் தான். இன்னிக்கி நான் ஒரு நல்ல சட்டை, பேண்ட் போட்டு ஒரு இருக்கேன். ஆனால், அன்னிக்கி என் சட்டைல பட்டன் இருக்காது பின்னு போட்டிருப்பேன், ஊக்கு போட்ட பாரகான் செருப்பு போட்டு இருப்பேன். அப்போதே என் தோளில் கை போட்டு என் டைரக்டர் அப்டின்னு சொன்னவர் அஜித் சார். இன்னைக்கு அவர் இவ்வளவு பெரிய ஆளாக இருப்பதற்கு ஒரே காரணம் நான் அஜித்திடம் பார்த்த அந்த குணத்தை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் Identity செய்துள்ளனர் என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ...


இதில் மேலும் படிக்கவும் :