திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 28 மார்ச் 2018 (12:00 IST)

சூர்யா-விஜய்சேதுபதி தயாரிப்பாளர்கள் மோதல்

நடிகர் சூர்யா தான் நடிக்கும் படத்தின் இயக்குனர்களுக்கு கார் பரிசளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சிங்கம் இயக்குனர் ஹரி, பசங்க 2 இயக்குனர் பாண்டிராஜ், மற்றும் 'தானா சேர்ந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர்களுக்கு அவர் கார் கொடுத்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இதுகுறித்து விழா ஒன்றில் கருத்து கூறிய 'விக்ரம் வேதா' தயாரிப்பாள சஷிகாந்த், ''ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால் சில சமயங்களில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறோம். மாறாக, அந்த வெற்றியை அமைதியாக வீட்டில் கொண்டாட வேண்டும். சினிமாவில் கூட்டாக இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்கிறோம், போராடி தான் வெற்றியை அடைய முடிகிறது. எனவே அது கொண்டாடப் பட வேண்டியதுதான். ஆனால் அதை விளம்பரப்படுத்தி ஆதாயம் தேட நினைப்பதுதான் தவறு. ஒரு முன்னணி நடிகர் அவரது இயக்குநருக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார். இது தேவையா? என்று பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் சஷிகாந்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D  எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் தனது டுவிட்டரில் கூறியபோது, 'தன் படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் இயக்குனருக்கு முழு சம்பளத்தை கூட ஒழுங்காகத் தராத ஒருவர், பரிசுகளைப் பற்றி பேசுகிறார்!! இதுதான் நகைப்புக்குரிய முரண்!!’ என்று கூறியுள்ளார். சூர்யா, விஜய்சேதுபதி படங்களின் தயாரிப்பாளர்களின் இந்த மோதலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.